17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் உயிர் நீத்தார் நாள்.

காவலர் உயிர் நீத்தார் நாள்.

எழுதியவர்: mohan October 22, 2019, 10:29 am

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலல் ஆண்டுதோறும் பணியின்போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..அதன் அடிப்படையில், காவல் துறையில் பணியின் போது தமிழகம் உள்பட நாடு முழுதும் இதுவரை உயிர்நீத்த 473 காவலர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இன்று 21.10.2019 -ம் தேதி மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உயிர் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

.இந்நினைவு நாளில் மதுரை மாவட்ட ஆட்சியர் .வினய் மதுரை சரக காவல்துறை துணை தலைவர்  ஆனி விஜயாமதுரை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் .மகேஷ்காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு .சசிமோகன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம்) முனைவர்..செந்தில்குமார் , காவல் துணை ஆணையர் போக்குவரத்து.சுகுமார்  மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!