17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழிகாட்டி மனிதர்கள் சார்பில் திறன் மேம்பாடு மற்றும் தீபாவளி விருந்து.

வழிகாட்டி மனிதர்கள் சார்பில் திறன் மேம்பாடு மற்றும் தீபாவளி விருந்து.

எழுதியவர்: mohan October 21, 2019, 11:52 am

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தொடர்வோம் அன்பு இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் நன்கொடையாக கிடைத்த நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவை உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கரங்களால் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முனைவர்.மாயகிருஷ்ணன் வரவேற்றார்.திருவள்ளுவர் கண்ணன் தொகுத்து வழங்கினார்.இல்லத்தின் நிர்வாகி வளர்மதி நன்றி தெரிவித்தார்.  சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார், ஆட்டோ கண்ணன், ராணுவ வீரர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!