18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்

காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்

எழுதியவர்: mohan October 20, 2019, 4:56 pm

காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை முன்னிட்டு இன்று (20. 10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  5 கிலோமீட்டர் ஓட்டத்தை மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்திலிருந்து காலை 06.00 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஓட்டம், கோரிப்பாளையம், பனகல் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே நகர் பிரதான சாலை, அண்ணாநகர் காவல் நிலையம் வழியாக, கே.கே நகர் வளைவு, மதுரை மாவட்ட நீதிமன்றம் வழியாக, ரேஸ் கோர்ஸ் சாலை, அழகர் கோயில் சாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக தமுக்கம் மைதானத்தில் முடிவடைந்தது.வெற்றி பெற்ற  நபர்களுக்கு காவல் ஆணையர் ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை துணை தலைவர்  ஆனிவிஜயா ., மதுரை மாநகர காவல் ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு.சசிமோகன் ., காவல் துணை ஆணையர் தலைமையிடம்  மகேஷ் ., காவல் துணை ஆணையர் போக்குவரத்து  சுகுமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ., ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!