17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நூரானியா பள்ளி குழுமம் மற்றும் பல மருத்துவ நிறுவனங்கள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்..

நூரானியா பள்ளி குழுமம் மற்றும் பல மருத்துவ நிறுவனங்கள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2019, 1:15 pm

கீழக்கரை நூரானியா பள்ளி வளாகத்தில் ஆரோக்கியா மருத்துவமனை, வாசன் ஐ கேர், ஸ்டார் ஹெல்த் இன்ஸ்டியூட், நூரானியா பிரைமரி ஸ்கூல், மற்றும் சிண்டியா ஜோன் சேவை மையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ கண் சிகிச்சை மற்றும் சக்கரை நோயாளிகளுக்கான பரிசோதனை முகாம் இன்று(19/10/2019) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இபுறாகீம் துவக்கி வைத்தார். நூரானியா ஸ்கூல் பொருப்பாளர் சுபைர், மைஃபா சங்க நிர்வாகி பாதுஷா, சிண்டியாஜோன் சேவை மையம் முகம்மது ஹாதில் மற்றும் பலர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!