18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரைக்காயர்பட்டணம் பள்ளி மாணவர்களுக்கு எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர்..

மரைக்காயர்பட்டணம் பள்ளி மாணவர்களுக்கு எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர்..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2019, 1:00 pm

தமிழகம் முழுவதும் பரவிவரும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி மரைக்காயர்பட்டணம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி மரைக்காயர்பட்டணம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு எஸ்டிபிஐ.,கட்சி சார்பில்  இன்று (18.10.2019) காலை, டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மரைக்காயர்பட்டணம் கிளை பொருளாளர் முகமது நயிம் தலைமை வகித்தார். மரைக்காயர்பட்டணம் ஜமாத் இணை செயலர் முகமது தாரிக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.ரவிச்சந்திரன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!