18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூலாங்குளம் அரசு பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா

பூலாங்குளம் அரசு பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா

எழுதியவர்: mohan October 17, 2019, 7:58 pm

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை . ஜூலியானா டெய்சி மேரி தலைமை வகித்தார்.

அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கத்தை சார்ந்த பொன் சேகர் மற்றும் மார்கண்டேயன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் வேல் முருகன் ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள், JRC மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு இனிதே நிகழ்வு நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!