17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் பள்ளி வளாக தூய்மை பணி, டெங்கு விழிப்புணர்வு

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் பள்ளி வளாக தூய்மை பணி, டெங்கு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan October 17, 2019, 5:39 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் அலுவலக வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் வழிகாட்டுதல் படி, நடந்த விழிப்புணர்வு, தூய்மைப் பணி நிகழ்ச்சிக்கு அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் ஜெ.கல்பனாத் ராய் தலைமை வகித்தார். மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தார்.

மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெர்னாண்டோ, கண்காணிப்பாளர்கள் கோவிந்த ராஜன், – மலைராஜன், தேர்வுத்துறை அலுவலக கண்காணிப்பாளர் டேவிட், அலுவலக உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் பரமேஸ்வரன், கணேசன், ஜோஸ்வா ஆன்டனி, பூமிநாதன்,அழகு சித்ரா, ரஹீம், கலைவாணி, மாரிக்கண்ணு பள்ளி மேலாண் குழு தலைவர் சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகேஷ் மலர், சத்துணவு அமைப்பாளர் செல்வராணி உதவியாளர் இந்திரா மற்றும் மாணாக்கரின் பெற்றோர் கலந்து கொண்டனர். பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் வளாகத்தை சுத்தம் செய்ய தனர் .பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ராபர்ட் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!