இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இதம்பாடல கிராமத்தில் முற்றிலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு நெல்,பருத்தி, மிளகாய், மிளகாய்வத்தல், வெள்ளரி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மழைநீர் மற்றும் கால்வாய் மூலம் இதம்பாடல் கண்மாய்க்கு நீர்வரத்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். இதனையடுத்து உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.62.70 லட்சம் மதிப்பீட்டில் பல ஏக்கர் பரப்பளவுள்ள கொண்ட கண்மாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது.இங்கு மொத்தம் நான்கு மடைகள் உள்ளன 1.பாப்பா மடை 2.வண்ணாமடை 3.நடுமடை 4.செகுட்டு மடை இந்த மடைகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியேறும் மடைகளை சீரமைப்பதுடன் புதிதாக இரண்டு மடை பழைய இரண்டு மடை உருவாக்கி தருவதாகவும், கண்மாய் தூர்வாரியதுடன் கரையை பலப்படுத்துவதாகவும் ஒப்பந்தகாரரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால் மடைகள் எதுவும் சரிவர சீரமைக்கப்படவில்லை. மடைகளில் இருந்து தண்ணீர் வெளியேற வழியே இல்லை. இதனால் கண்மாயில் தண்ணீர் தேங்கினாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வழியில்லாத நிலை உள்ளது. ரூ.62.70 லட்சம் செலவு செய்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில தினங்கள் பெய்த மழை காரணமாக கண்மாய் கரையில் உள்ள மண் கரைந்து மடைக்கு வந்து விட்டதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. கண்மாயில் புதிய மடையும் கட்டப்படவில்லை பழைய மடையும் புதுபிக்கவில்லை. கண்மாயின் உட்புறம் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவற்றையும் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் பாதை கடலாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நளினிகாந்த், கனகசபாபதி மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுசம்மந்தமாக அக்டோபர் 2 இதம்பாடல் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கைகள் எடுக்கவும், அதன் துறை சார்ந்த அதிகாரிக்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும், அம்மா கால் சென்டர் தொடர்பு கொண்டும் மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளுக்கும் இதுவரை எடுக்க வில்லை.எனவே மாவட்ட கலெக்டர், இதம்பாடல் கண்மாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து முறைகேடு செய்த ஒப்பந்தகாரர்கள் மீதும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளானதொ.சண்முகவேல்,பி.கணபதி,பி.சண்முகவேல்,சி.முருகேசன்,ச.அர்ஜூனன் மற்றும் ஊர் பொது மக்கள்,மக்கள் பாதை கடலாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நளினிகாந்த் மற்றும் கனகசபாபதி கோரிக்கை விடுத்துள்ளனர்.







You must be logged in to post a comment.