வில் மெடல்ஸ் நிறுவனமானது சிறப்பான சமூக சேவைப்பணி செய்யும் சமூக சேவகர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர் தமிழர் எனும் விருதை வழங்கி வருகிறது.15.10.2019 அன்று முகவை மண்ணைச்சேர்ந்த பேராவூர் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி சுகுமார்ன் கஜா புயல் பேரிடர் கால சமூகப்பணிகளைப்பாராட்டி வில் மெடல்ஸ் சார்பில் உயர் தமிழர்- 2019 எனும் விருதானது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இராமநாதபுரத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தின விழா நிகழ்வில் இவ்விருதானது வில் மெடல்ஸ் நிறுவனத்தினரால் ஆசிரியை காளீஸ்வரிக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மருத்துவர் சேதுராமன் கலந்துகொண்டு விருதுபெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரிக்கு பூச்செண்டு வழங்கி சிறப்பு செய்தார்.கலாம் மாணவர்கள் இயக்கம் நடத்திய கலாம் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வில் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கலாம் மாணவர்கள் இயக்க நிறுவனர் தலைவர் விஜயேந்திர ராஜா செய்திருந்தார்.







You must be logged in to post a comment.