17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிக்., பள்ளியில் அறிவியல் கண் காட்சி

கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிக்., பள்ளியில் அறிவியல் கண் காட்சி

எழுதியவர்: mohan October 17, 2019, 12:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிக்., மேல்நிலை பள்ளியில் அப்துல் கலாம் அறிவியல் பேரவை சார்பில் கண் காட்சி இரண்டு நாட்கள் நடந்தன. பள்ளபட்டி பிரோசிஸ் என்விரோ சிஸ்டம் டெர்மினேட்டிங் ஆப் வேஸ்ட் பிளாஸ்டிக் சிஸ்டம் தலைமை செயல் அதிகாரி கே.கே.காஜா மொய்னுதீன் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 450 மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன.

இதர பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர். பள்ளி தாளாளர் அல்ஹாஜ் இஎம்எஸ் மௌலா முகைதீன், பள்ளி கல்விக்குழு துணைத்தலைவர் எம்எம்எஸ் முகைதீன் இப்ராஹிம், செயலாளர் டாக்டர் எம்.எச்.ராசிக் தீன், துணை செயலர் முகமது ரபீக், அப்துல் கலாம் அறிவியல் பேரவை தலைவர் அல்ஹாஜ் எஸ்.முகமது ரபீக் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு நாள் கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் முனைவர் என்.எம் சேகு சஃபான் பாதுஷா செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!