இராமநாதபுரம் பாரதி நகர் டி -பிளாக் பகுதியில் உள்ள விடுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில்
போலீசார், அந்த விடுதியில் சோதனை நடத்தினர். அங்கு அறை எண் 315ல் சீட்டாடிய 8 பேர் கும்பல் சிக்கியது. மதுரை நாகராஜன் 36, அக்பர் 41, கே.நாகராஜன் 45, ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் நாகேஸ்வரன் 54, நாரையூரணி வெள்ளைச்சாமி 41, புளிக்காரத் தெரு கணேசன் 77, வன சங்கரி அம்மன் கோயில் தெரு ராஜசேகர் 32, அலங்கசேரி 85, முனியசாமி, விடுதி உரிமையாளர் ரெத்தினம் உள்பட பேர் மீது வழக்கு பதிந்தனர். முனியசாமி, ரெத்தினம் நீங்கலாக 8 பேரை கைது செய்து, சூதாட்ட தொகை ரூ.2.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதே விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹை டெக் விபசார கும்பலை , கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரத்தில் விடுதியில் சூதாட்டம் 8 பேர் கைது.. ரூ.2.39 லட்சம் பறிமுதல்
எழுதியவர்: mohan October 17, 2019, 11:55 am




You must be logged in to post a comment.