அப்துல்கலாம் அவர்களின் 88 பிறந்தநாளினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டிகள் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் 28 பள்ளிகளில் சுமார் 186 மாணவ
மாணவிகள் கலந்து கொண்டார்கள். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு கலாம் ஐயாவின் பிறந்தநாள் 15/10/2019 அன்று இராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வைத்து கலாம் மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் விஜேந்திர ராஜா தலைமையில் நடைபெற்றது. ரவி அவர்கள் வரவேற்புரை செய்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சகோ செல்வமேரி முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்வில் பல சமுக ஆர்வலர்கள்கள் கலந்து கொண்டு கலாம் ஐய்யாவின் சிறப்புகளை வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து பரிசுகள் வழங்கினார்கள். உமாராணி அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்வினை நிறைவு செய்தார்கள்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டிகள்
எழுதியவர்: mohan October 17, 2019, 10:06 am




You must be logged in to post a comment.