18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » ஏர்வாடி ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா..

ஏர்வாடி ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2017, 10:51 pm

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் 19-04-2017 அன்று ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் பள்ளி மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகளும், அவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக கல்வி சோலையின் மழலை மலர்கள் மனம் மகிழ, இம் மாணவ, மாணவியர்கள் வருங்காலத்தில் இந்தியாவை வல்லரசாக உருவாக்கவும், ஊரின் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றினைந்து ஒற்றுமையை உணர்த்தவும் சமாதான புறாக்களை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, ஏர்வாடி காவல் துறை சார்பு ஆய்வாளர் பாண்டிய ராஜன், பள்ளியின் யெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமீன் மாலிக் உசேன் ஆகியோர் வானில் பறக்க விட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!