17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் புத்தாக்க விழா

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் புத்தாக்க விழா

எழுதியவர்: mohan October 16, 2019, 4:59 pm

இராமநாதபுரம் மாவட்டம் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி நிறுவனர் வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் முன்னிட்டு புத்தாக்க விழா இன்று காலை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வரவேற்றார்.பிளாஸ்டிக் பயன்பாடு பற்றியும், பிளாஸ்டிக் மறுசுழற்சி, மக்கும்குப்பை,மக்காத குப்பை, பிளாஸ்டிக் மூலம் பேவர் பிளாக் தயாரித்தல் குறித்தும், கழிவுப்பொருட்கள் மூலம் பெட்ரோல் தயாரித்தல் பற்றி பள்ளப்பட்டி பிரோசிஸ் என்விரோ பொலூசன்,டெர்மினேட்டிங் வேஸ்ட் பிளாஸ்டிக் சிஸ்டம் தலைமை நிர்வாகி ஜனாப். கே.கே.காஜா மொய்னுதீன் கூறினார்.தமிழ்த்துறை தலைவர் முனைவர்.வே.அகிலா, நன்றி கூறினார். கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள்,தேர்வாணையர், பல்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், 2000க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் ஷேக் தாவூத்கான், தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!