17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » செயின் பறிப்பு திருடா்கள் கைது

செயின் பறிப்பு திருடா்கள் கைது

எழுதியவர்: mohan October 16, 2019, 4:50 pm

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்த 23.9.19ந் தேதி மாலை செயின் பறிப்பு நடைபெற்றதாக மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  உத்தரவின் பேரில் மாவட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பிரிவு போலீசார் உஷார் படுத்தப்பட்டு நிலையில் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரம் வழியே திருடர்கள் தப்பிச் செல்வதாக வந்த தகவலின் பேரில் அங்கு ரோந்தில் ஈடுபட்ட. அண்ணாதுரை, மூவேந்தன், காளிராஜ்ஆகிய மூவரும் திருடர்கள் வந்த வாகனத்தை மறித்த போது நிற்காமல் தப்பித்த நிலையில் ரோந்து வாகனத்தில் விரட்டிச் சென்ற போலீசார் திருடர்களின் வண்டி மீது மோதி அவர்களை கீழே விழச் செய்தனர். இந்த நிலையில் வண்டியை கீழே போட்டுவிட்டு கருவேல மரங்கள் நிறைந்த தரிசு காட்டுப்பகுதிக்குள் தப்பித்துச் செல்ல முற்பட்டனர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் , நிகழ்வில் காயமடைந்த போதிலும் திருடர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.இந்த நிகழ்வைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினரின் சாதுரியத்தை வெகுவாக பாராட்டினர். இருவரையும் விசாரித்ததில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி(30), N.கல்லுப்பட்டியைச் சேர்ந்த செல்வம்(25) என தெரிந்தது. இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி அவர்கள் பறித்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்து மேற்படி நபர்கள் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!