17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி ஊழலை எதிர்க்கும் போலீஸ்காரர்..!

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி ஊழலை எதிர்க்கும் போலீஸ்காரர்..!

எழுதியவர்: mohan October 16, 2019, 2:41 pm

போலீஸ்காரர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் ஊழல் மற்றும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான வாசகங்களை ஸ்டிக்கராக ஒட்டி வலம் வருவது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). இவர், கடந்த 2008ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக, பணியில் சேர்ந்தார். தற்போது, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் – ஒழுங்கு பிரிவில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தின் முகப்பில், ‘ஊழலை ஒழிப்போம்; நெகிழியை வெறுப்போம்; ரசாயன உணவை தவிர்ப்போம்’ என்ற வாசகங்களை ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார். இந்த விழிப்புணர்வு வாசகங்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. லஞ்சம், ஊழலில் திளைக்கும் போலீஸ் துறையில், துணிச்சலாக இப்படி எழுதி வலம் வரும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!