17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேட்பாளர்களுக்கு உயர் பாதுகாப்பு; இலங்கை ஜனாதிபதி உத்தரவு..!

வேட்பாளர்களுக்கு உயர் பாதுகாப்பு; இலங்கை ஜனாதிபதி உத்தரவு..!

எழுதியவர்: mohan October 16, 2019, 12:48 pm

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஸ, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (15ம் தேதி), ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜனாதிபதி சிறிசேன, “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க வேண்டும்” என, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!