17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளியூர் காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

வள்ளியூர் காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 16, 2019, 10:06 am

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தலைகவசத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி காவல்நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .அருண்சக்தி குமார்  உத்தரவிட்டார்.அதன் ஒரு பகுதியாக வள்ளியூர் கோட்டையடி பஸ்நிலையம் அருகே வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டும் பொதுமக்களுக்கு வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி பொதுமக்கள் தலைகவசம் அணியாததால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றியும், தலைகவசத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், மது அருந்தி வாகனம் ஓட்டுதல் கூடாது போன்ற அறிவுரைகளையும் வழங்கினார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இப்பகுதி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள்,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழகத்தின் சார்பில் நெல்லை .வெங்கடேஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!