18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி பேருந்து நிலையத்தின் வணிக கடையின் மேல் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது

பழனி பேருந்து நிலையத்தின் வணிக கடையின் மேல் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது

எழுதியவர்: mohan October 16, 2019, 10:00 am

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் வணிக கடையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள வணிகர்களிடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் உள்ள வணிக கடை ஒன்றின் முன்புறம் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த செய்தி மறைவதற்குள் அதே கடையின் மேற்கூரை சற்றுமுன் திடீரென்று இடிந்து விழுந்ததால் அருகிலுள்ள கடைக்காரர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்படுகின்றனர். நகராட்சி கடையின் அவலநிலையை கண்டித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கடை முன்பு சூழ்ந்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!