18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்திய பாதை இதழ் மற்றும் கீழை நியூஸ் நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிறுவனருக்கு சிறந்த மற்றும் மூத்த பத்திரிகையாளர் விருது.!

சத்திய பாதை இதழ் மற்றும் கீழை நியூஸ் நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிறுவனருக்கு சிறந்த மற்றும் மூத்த பத்திரிகையாளர் விருது.!

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2019, 9:15 pm

இன்று 15/10/2019) காலை 11.00 மணியளவில்  கொடைக்கானலில் Press & media  Peoples Association சார்பாக  நடைபெற்ற தென் மண்டல கலந்தாய்வு கூட்டம் மற்றும் மூத்த பத்திரிகையாளரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல வருடங்களாக தொடர்ந்து பத்திரிகை உலகில் பயணித்து வரும் சத்திய பாதை இதழின் ஆசிரியர், மற்றும் கீழை நியூஸின் நிறுவனர், செய்யது ஆப்தீனுக்கு மூத்த மற்றும் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கும் பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு செய்யதுஆப்தீன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது உள்ள காலகட்டங்களில் உண்மையை அறிந்து தெரிந்து பத்திரிகையை நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது கையில் ஒரு ஆன்ட்ராய்டு ஃபோன் இருந்தாலே போதும் தன்னை நிருபர்கள் என்று கூறிக்கொண்டு பலர் திரிகிறார்கள்.  மேலும் சிலர் செய்திகளை முந்தி தருகிறோம் என்ற பெயரில் எதை தர வேண்டுமோ அதை தராமல் வேறு எதையோ தருகிறார்கள்.  செய்தியை முந்தி தருவது பெரிய விஷயமல்ல. அதில் எவ்வளவு உண்மை தன்மை உள்ளது என்பதை அறிந்து தர வேண்டும் தற்போது பல்வேறு பத்திரிகையாளர் நலிவடைந்த நிலையில் உள்ளனர். ஆகையால் தமிழக அரசு பத்திரிகையாளர்களை கவனத்தில் கொண்டு இனம் கண்டு பல சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார்.

இவரின் உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!