17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

எழுதியவர்: mohan October 15, 2019, 8:06 pm

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர்கள் செந்தாமரை, சிவராமன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். உசிலம்பட்டி அருகே லிங்கப்பநாயக்கணூர் கன்மாயினை தூர்வாரவேண்டும், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள கழிவுகளை கண்மாயில் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும் உசிலம்பட்டி திருமண மண்டபங்களில் முகூர்த்தநாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு அதிகாரிகள் போர்கால அடிப்படையில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்;.இதில் 58கிராம கால்வாய் விவசாயிகள் சங்கம் மற்றும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!