திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தில் பேரிடர் மேலாண்மை டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி பேரணி
மைக்கேல்பாளையம் RC.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக
பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின்சந்திராமேரி தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.பேரணி பாளையத்தில் உள்ள சர்ச் தெரு ,செம்பட்டி ரோடு, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மாணவர்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.இப்பேரணி கிராமப்புறத்தில் நடந்ததால் கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்நிகழ்ச்சியில் கோட்டுர் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை அருகே டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
எழுதியவர்: mohan October 15, 2019, 7:03 pm




You must be logged in to post a comment.