17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே ஓம்சக்தி நகர் ஆரம்பப் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் , கை கழுவும் தினம்

இராமநாதபுரம் அருகே ஓம்சக்தி நகர் ஆரம்பப் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் , கை கழுவும் தினம்

எழுதியவர்: mohan October 15, 2019, 6:11 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஒம் சக்தி நகர் ஆரம்பப் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் மற்றும் கை கழுவும் விழா நடைபெற்றது. அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர கல்பனாத் ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவ, மாணவியரிடம் அவர் அறிவுறுத்தியதாவது: ‘’கை களை முறையாக கழுவாததால் பல நோய் தொற்று ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், வாகனம் ஓட்டி வந்த பிறகும் கைகளை முறையாக கழுவ வேண்டும்: செல்போன், கணினி பயன்படுத்திய பிறகும் ,வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும்.கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கை கழுவுவதுவே முறையான கை கழுவுதலாகும். இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80 சதவீதம் வராமல் தடுக்க முடியும் என்றார் .தேர்வுத்துறை உதவி இயக்குநர் கல்பனா ராய், ஆசிரியை கிருஷ்ணவேணி, பள்ளி மேலாண் குழு தலைவர் சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேஷ் மலர், சத்துணவு அமைப்பாளர் செல்வராணி, உதவியாளர் இந்திரா மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!