18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

எழுதியவர்: mohan October 15, 2019, 5:53 pm

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி தமிழ்துறை சார்பில் கல்லூரி நிறுவனர் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பாராட்டு விழா, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் புத்தாக்க தின விழா மற்றும் இலக்கிய சாரல் விழா நடந்தது. சீதக்காதி அறக்கட்டளை டிரஸ்டி அஹமத் ஏ.ஆர்.புஹாரி தலைமை வகித்தார். வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை முதலாமாண்டு மாணவி செ.செய்யது நஸீகா கிராத் ஓதினார். தமிழ் துறைத் தலைவர் முனைவர் வே.அகிலா வரவேற்றார். முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வாழ்த்துரை வழங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் காப்பியக்கவிஞர் முனைவர் பாகை த.ரா.கண்ணதாசன் பேசினார்.

பிளாஸ்டிக் ஒழிப்பில் மாணவ, மாணவியரின் பங்கு பேச்சுப்போட்டியில் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி பிகாம் (சி.ஏ) மூன்றாம் ஆண்டு மாணவி மு.மு ஹைரூன் ஹபிலா, கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி பி.எஸ்சி (ஐ.டி) மூன்றாம் ஆண்டு மாணவர் து. ஷேக் முகம்து ராசித், முத்துப்பேட்டை கெளசானல் கலை, அறிவியல் கல்லூரி பி.ஏ (தமிழ் இலக்கியம்) முதலாம் ஆண்டு மாணவர் ரா.ஹரிஹரசுதன் ஆகியோர் முதல் மூன்று பரிசு வென்றனர்.கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியை இரா.விசாலாட்சி நன்றி கூறினார். கல்லூரி தலைவர் ரஹ்மத்நிஷா அப்துர் ரஹ்மான், செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி, துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!