17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கனமழை எதிரொலி-குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

கனமழை எதிரொலி-குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

எழுதியவர்: mohan October 15, 2019, 5:42 pm

நெல்லை மாவட்டத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி,செங்கோட்டை, கடையநல்லூர்,சேர்ந்தமரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நேற்று 14.10.19 மாலையில் இருந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்வதால் இன்று காலை குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி விழுவதால் பாதுகாப்பு காரணம் கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க காலையில் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடைவிதிக்கப்பட்டது.தற்போது தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் தற்போது தடை நீக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!