18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.

உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.

எழுதியவர்: mohan October 15, 2019, 3:22 pm

உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் உள்ள ஹனுமான் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அபயஹஸ்தல ஹனுமான் திருக்கோவிலில் தொடர்ந்து மூன்று யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து ஹனுமானுக்கு நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச்சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் 5000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை உசிலம்பட்டி விஜய் மருத்துவமணை நிர்வாகியும், பாஜக மாவட்டமருத்துவரணி தலைவருமான விஜய் ஏற்பாடுகளை செய்திருந்தார். அதனைதொடர்ந்து ஹனுமானுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!