17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி -மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை

உசிலம்பட்டி -மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: mohan October 15, 2019, 3:04 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்  மனைவி ஆறுமுகம். இவர் உசிலம்பட்டி நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வரும் சூழலில் பணிக்கு விடுப்பு தெரிவித்துவிட்டு இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் போலிசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த போலிசார் நடத்திய விசாரனையில் ஆறுமுகத்திடம் அவரது மாமியார் சின்னத்தாய் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், நேற்று மாலை ஏற்பட்ட தகராறில் சின்னத்தாய் மருமகள் ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலிசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!