18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோத்துப் பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

சோத்துப் பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

எழுதியவர்: mohan October 15, 2019, 12:20 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைவராக நதி ஆற்றின் குறுக்கே, தேனி மாவட்டத்தில் 28 65 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் சோத்துப் பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து 15.10. 2019 முதல் 15.3.2020 வரையிலான முதல் போக பழைய நஞ்சை பாசன நிலங்களான 1825 ஏக்கருக்கும், புதிய புஞ்சை பாசன நிலங்களான 1040 ஏக்கருக்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரை 62 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை 31 நாட்களுக்கு வினாடிக்கு 27கன அடி வீதமும் ஜனவரி 16 முதல் மார்ச் 15 வரை 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடி வீதமும் ஆக மொத்தம் 152 நாட்களுக்கு 360.46 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் .பல்லவி பல்தேவ் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் .செந்தில் அண்ணா,பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரித்தா, பொதுப்பணித் துறை (ம) நீர் வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தின் மாலா , பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் .ராஜகோபால் உட்பட பொதுப்பணித் துறையினர், வருவாய் துறையினர் , விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அணையின் நீர் இருப்பைப் பொறுத்து இதே போல் தண்ணீர் திறந்து விடப்படும். சோத்துப் பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரால் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் , தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர். அணையின் மொத்த நீர் மட்டம் 126.58 அடி ஆகும்.

.சாதிக் பாட்சா, நிருபர்தேனி மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!