18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் விபச்சாரம். 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது..

மதுரையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் விபச்சாரம். 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது..

எழுதியவர்: mohan October 15, 2019, 10:52 am

திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரத்தில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக திருநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)காந்திமதி சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும்போலீசார் சந்தேகப்படும்படியான அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அதில் 5பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்ததாக தெரிகிறது .அவர்களிடம் போலீசார் விசாரணைசெய்தனர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக தகவல் தெரிவித்தாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்த தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.அதில் மதுரை எஸ்.எஸ் காலனி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பகுதிகளை கிளையாகவும், நெல்லையப்பபுரத்தை தலைமையிடமாகவும் சிலவீடுகளைவாடகை பிடித்து குடும்பம் நடத்தி வருவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.இதில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக இருந்து மதுரை பஸ் நிலையங்களில் இருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஹைடெக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீட்டில்விபச்சார விடுதி நடத்தியதாக மதுரையை சேர்ந்த தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!