17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்

எழுதியவர்: mohan October 14, 2019, 6:51 pm

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வசிக்கும் தெற்குத்தெரு காலணிப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து கிராமமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் மதுரை தேனி தேசிய நெடுஞசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!