18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 14, 2019, 5:32 pm

திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந் நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் Dr, விக்டோரியா தலைமையேற்று நடத்தினார். கல்லூரி துணை முதல்வர் Dr ,திருத்தணி ,Dr, சுபாஷ் ( நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ) Dr, நாகபிரேமா ( HOD) நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக நெல்லை காவல்துறை அதிகாரி சேகர் ( சமூகநீதி மற்றும் சமூக உரிமைகள் பிரிவு) சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.காவல்துறை சார்பாக கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிள் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது குறிப்பாக ராக்கிங் கொடுமையால் ஏற்படும் தீமைகளை பற்றி விளக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இனிதே வரவேற்பு நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!