18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை – பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 14, 2019, 4:19 pm

 மதுரை நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியில் உள்ள சிறு மலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை தீயணைப்புத்துறையினர் சார்பாக பேரிடர் மீட்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வெள்ளத்தில் இருந்து எவ்வாறு தப்புவது உயரமான கட்டடங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது மேலும் முதலுதவி அளிப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.மதுரை தீயணைப்பு துறை அதிகாரி வெங்கடேசன்  தலைமை செய்து காட்டினர். மாணவிகள் இதுகுறித்து குறிப்பிடுகையில் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது எனவும் பல விஷயங்கள் இதன் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டோம் மேலும் இதைப்பற்றி நாங்கள் எங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் விளக்கம் கொடுப்போம் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!