17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » ஆரணியில்  அறுந்து கிடந்த மின்ஒயரை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபா் பலி

ஆரணியில்  அறுந்து கிடந்த மின்ஒயரை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபா் பலி

எழுதியவர்: mohan October 14, 2019, 12:59 pm

திருவண்ணாமலை மாவட்டம்ஆரணி டவுன் காந்தி நகர்  பகுதியை சேர்ந்தவர்தீனதயாளன். இவர் ஆரணி – ஆற்காடு சாலையில் உள்ள துணிகடையில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.  இந்நிலையில்  ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடிரென மழை பெய்து ஓய்ந்தநிலையில்  தீனதயாளன் கடையை சுத்தம் செய்துவிட்டு குப்பையை கொட்டுவற்காக கடையின் எதிர்புறம் சென்ற போது எதிர்பாரதவிதமாக மின்கசிவு ஏற்பட்டிருந்த மின்ஒயரை மிதித்துள்ளார்.இதில்   தீனாதயாளன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பொதுமக்கள் கவனகுறைவாக இருந்த மின்சாரதுறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.ஆரணி மாமரம் பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து இரும்பேடு இந்திராகாந்தி சிலைவரை சாலையை அகலப்படுத்தி மின்விளக்குகளுடன் கூடிய சென்டர் ஜாய்ன்ட் மீடியா சுவர் கடந்த. 3 மாதத்திற்கு முன்புதான் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!