17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை நகராட்சியில் கட்டண கொள்ளை

திருவண்ணாமலை நகராட்சியில் கட்டண கொள்ளை

எழுதியவர்: mohan October 14, 2019, 12:42 pm

திருவண்ணாமலைக்கு  நகரத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர். திருவண்ணாமலை நகருக்கு வரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திருவண்ணாமலை மாடவீதிகளில் உணவு குடிநீர் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை  கொண்ட     தற்காலிகக் கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது. பவுர்ணமி தினத்தன்று தற்காலிகமாக செயல்படும் கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் கட்டணம் வசூல் செய்கிறது. வசூல் டிக்கெட்டில் கட்டண தொகையும் குறிப்பிடாமல் காலியான டோக்கனை கொடுத்து 50 100 என மாயமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்காலிக கடை நடத்துபவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சியின் கடைநிலை ஊழியர்கள் செய்யும் இந்த செயலால் திருவண்ணாமலை நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக வரும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!