உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று துப்புரவு பணியாளர்கள் பல்Nவுறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதக்கழிவுகளை அகற்ற எந்தவித பாதுகாப்பு சாதனம் வழங்காதது, கூடுதல் வேலைபளு, மாதந்தோறும் சோப்புகள், கையுறை, செருப்புகள் தரமானதை வழங்ககோரியும்,வருங்கால வைப்பு நிதி வழங்காதது,அரசு ஊழியர்களுக்கு வாரவிடுப்பு வழங்க வேண்:டும் என்பது உள்பட 10க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சி தென்மண்டல தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம
எழுதியவர்: mohan October 14, 2019, 11:31 am




You must be logged in to post a comment.