17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உள்ளாட்சியில் நல்லாட்சி

உள்ளாட்சியில் நல்லாட்சி

எழுதியவர்: mohan October 14, 2019, 11:16 am

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம்  போகலூர் ஒன்றியம் செய்யாலூர் ஊராட்சியில் நடைபெற்றது .போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் வரவேற்புரை ஆற்றினார். இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை தாங்கி நேர்மையாளர் சகாயம் அவர்களை பற்றியும், கிராம சபை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்து மக்கள் பாதையின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

மக்கள் பாதை மாநில படிக்கட்டு திட்ட பொறுப்பாளர் ஆரோக்கிய வில்சன் கலந்து கொண்டு உள்ளாட்சியில் ஊழலை ஒழித்திடவும், நல்லாட்சி அமைத்திடவும், தன்னாட்சி அதிகாரம் பெற்றிடவும், நேர்மையானவர்களை அடையாளம் கண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும், வெளிப்படையான நிர்வாகம் அமைய முயற்சி மேற்கொள்ள வேண்டுமென சூளுரைத்து சிறப்புரை ஆற்றினார்.திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் கிளாட்வின் நன்றியுரை கூறினார்.மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் வீரக்குமார், இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், இராமநாதபுரம் நகர பொறுப்பாளர் சசிக்குமார் மற்றும் , மக்கள் பாதை தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!