18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த முயன்ற 3, 200 கிலோ. கடல் அட்டை பறிமுதல், இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 3, 200 கிலோ. கடல் அட்டை பறிமுதல், இருவர் கைது

எழுதியவர்: mohan October 13, 2019, 3:50 pm

ராமநாதபுரம் மாவட்டம பாம்பன் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்போவதாக மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் படி , மண்டபம் வனச்சரகா வெங்கடேஷன் தலைமையில் வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று அதிகாலை ரோந்து மேற்கொண்டனர். அப்போது மண்டபம் தென் கடற்கரை சோதனை சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தியிருந்த நாட்டுப்படகை சோதனையிடச் சென்றனர்.

வனத்துறையினரை கண்டதும் படகில் இருந்து இருவர் கடலில் குதித்து தப்பிக்க முயன்ற இருவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.படகில் 261 மூடைகளில் உயிருடன் 3, 200 கிலோ கடல் அட்டைகள் மறைத்து வைத்துருந்தது தெரியந்தது.விசாரணையில்,மண்டபம் அருகேவேதாளையைச் சேர்ந்த சாகுல் ஹமீது 31, கருப்பையா 45 எனவும், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து கடல் அட்டைகள், நாட்டுப்படகை பறிமுதல் செய்து சாகுல்ஹமீது, கருப்பையாவை கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!