17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பாதயாத்திரை

மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பாதயாத்திரை

எழுதியவர்: mohan October 13, 2019, 11:44 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய பாஜக சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா ஒன்றிய தலைவர் முரளி தலைமையில்  கொன்டாடப்பட்டது. நகர தலைவர் சிவா முன்னிலை வகித்தார்.  பாலக்கோடு பேருராட்சி முன்பு உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் வரதராஜன் மாலை அணிவித்து பாதயாத்திரை ஊர்வலம் சென்றனர். கடைத்தெரு எம்.ஜிரோடு வழியாக தக்காளி மார்க்கெட் வரை சென்று பின் பஸ் நிலையத்தை அடைந்தனர்.

தூய்மை பேணல், மதுவை தவிர்த்தல், பெண்கள் முன்னேற்றம் , மரங்கள் வளர்த்தல், சமூக ஒற்றுமை மேம்படுத்துதல், நீர் மேலாண்மையின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற முழங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி சென்றனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பாளராக தேசிய சிறுபான்மை துணைத் தலைவர் முனைவரி பேகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்னன், மாவட்ட மகளிர் அணி பொதுசெயலாளர் கிருஷ்ணவேணி மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!