17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கோவில் இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் முற்றுகை

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கோவில் இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் முற்றுகை

எழுதியவர்: mohan October 13, 2019, 10:54 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ். மேட்டுப்பட்டி கிராம அனைத்துத்தரப்பு பொதுமக்களுக்கும் பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் சாமிக்கு தேவையான அனைத்து நகைகளையும் , உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாக்க கோவில்  அருகே தனியாக கோவில் வீடு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வீட்டை இக்கிராமத்தை சேர்ந்த சிலர் திடீரென பொதுமக்களுக்கு தெரியாமல் இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு  நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு சுமார் 200 பேர்கள் காளியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோவில் வீட்டை பிடித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதுகாக்க கோரியும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காளியம்மன் கோவில் திருவிழா மற்றும் கோவில் வழிபாடு வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த செயல் மூலமாக ஊரின் அமைதி நிலை கெட்டு எந்த நேரமும் எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும், உடனடியாக ஊரை விட்டு வெளியேறி விடுவோம் என கோஷமிட்டனர்.  அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் கிராம பொது மக்களிடம் உரிய இடத்தை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!