17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விதைப் பந்து தயாரித்தல்

விதைப் பந்து தயாரித்தல்

எழுதியவர்: mohan October 13, 2019, 10:40 am

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் HCL நிறுவனம், தானம் அறக்கட்டளை இணைந்து நடத்திய விதைப்பந்து தயாரித்தல் முகாம் நடைபெற்றது. இந் நிகழ்வில் HCL நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், தானம் அறக்கட்டளை நிறுவனத்தினர், பூமி அறக்கட்டளை நிறுவனத்தினர் வழக்கறிஞர் ஜமாலுதீன், பசுமை தன்னார்வலர் அசோக், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்லேடி டோக் கல்லூரி மாணவியர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒத்தக்கடை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆவி, மூங்கில், கருவேலம், வாகை, சொர்க்கம், நெட்டிலிங்கம், மலைவேம்பு, மருது, களஞ்சியம், கடுக்காய், தேக்கு, அழிஞ்சி, நெல்லி உள்ளிட்ட விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. ஏறத்தாழ எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒத்தக்கடை பள்ளி ஆசிரியர்கள் மாலா (த ஆ பொ) மோசஸ் மங்களராஜ், ஹேமமாலினி, லதா, ஷகிலாமாய் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!