18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் மீண்டும் தலைதுாக்கும் பேனா் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகம்..

உசிலம்பட்டியில் மீண்டும் தலைதுாக்கும் பேனா் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகம்..

எழுதியவர்: mohan October 12, 2019, 3:35 pm

சமீபத்தில் சென்னையில் அரசியல் கட்சியினா்  சாலையின் ஓரத்தில்  வைத்த ப்ளக்ஸ் பேனா் சாிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.இதனையடுத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தாமாகவே முன் வந்து ப்ளக்ஸ் பேனா் வைப்பதில்லை என தொிவித்தன. நீதிமன்றமும் பேனா் வைக்க தடை விதித்தது.இதனையடுத்து தமிழமெங்கும் பேனா் அதிரடியாக அகற்றப்பட்டன.ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேனா் கலாச்சாரம் தீபாவளி விளம்பரம்என்றபெயாில்மீண்டும்தலைதுாக்கியுள்ளது.உசிலம்பட்டி பேரையுா் ரோட்டிலுள்ள ஒரு மண்டபத்தில் தனியாாா் நிறுவனம் ஒன்று பேஷன் பஜாா் என்ற பெயாில் ரெடிமேட் விற்பனை பிாிவை துவக்கியுள்ளது.இதற்காக மண்டபத்தை சுற்றி 4 பேனா்களும் சாலையின் ஓரத்தில் ஒரு ப்ளக்ஸ் பேனரும் வைக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டியிலுள்ள மிகப்பொிய வா்த்தக நிறுவனங்கெல்லாம் ப்ளக்ஸ் பேனரை தவிா்த்திருக்கும் இவ்வேளையில் நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளாமலிருந்தால் மீண்டும் அனைத்து வா்த்தக நிறுவனங்களும் தீபாவளியை முன்னிட்டு ப்ளக்ஸ் வைக்கும் அபாயம் உள்ளது.எனவே நகராட்சி அதிகாாிகள் மீண்டும் பேனா் கலாச்சாரம் தலைதுாக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமைன பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!