18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – வளரும் குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், பழங்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உசிலம்பட்டி – வளரும் குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், பழங்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 12, 2019, 2:42 pm

உசிலம்பட்டி தனியார் பள்ளியில் வளரும் குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள் பழங்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இன்றைய காலகட்டத்தில் வளரும் சிறார்கள் உணவுப்பழக்க வழக்கத்திலும் மாறி வருகின்றனர்.நுர்டுல்ஸ் சாக்லெட் ஓட்ஸ்கஞ்சி என புது உணவு வகைகளை விரும்புகின்றனர்.இதனால் சில பின்விளைவுகளும் ஏற்படுகின்றன.இவர்களுக்கு இயற்கை காய்கறிகள் பழங்கள் குறித்த மகத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள கிரீன்பார்க் வித்யாலயா சிபிஎஸ்சி என்ற தனியார்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் காய்கறிகள், பழங்கள். சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் ஊட்டசத்துக்கள் அதிகம் கிடைக்கும் மற்றும் காய்கறிகளை கண்டறிவது உள்ளிட்டவைகளை விளக்கினர். அதனைதொடர்ந்து குழந்தைகள் பழங்களின் படங்களை வைத்து அதன் பயன்பாடுகளை கூறினர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ராஜக்கிளி, தாளாளர் பிச்சைமாயன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அபிநயா, ராஜசேனா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!