திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இலுப்பகுணம் கிராமத்தில் உள்ள குமாரசாமி அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் – ராதிகா தம்பதிகள். இவர்களின் ஒரே மகன் முரளி (எ) பரணி (13). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துகொண்டிருந்தவர் இடையில் நின்றுவிட்ட மாணவர் ஆவார். இவர் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றவர் இரவு
நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.இந்நிலையில் களம்பூர் ரயில்வேகேட் அருகே உள்ள விவசாய கிணற்றில் சிறுவன் சடலம் மிதப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உதவியுடன் சிறுவனின் பிரேதத்தை மீட்டனர்.சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுவன் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் களம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர
ஆரணி அருகே விளையாடச் சென்ற சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு.
எழுதியவர்: mohan October 12, 2019, 12:19 pm



You must be logged in to post a comment.