17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டம் துவக்கம்

மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டம் துவக்கம்

எழுதியவர்: mohan October 12, 2019, 11:09 am

மதுரை மாநகர காவல்துறையினர் பணிநிமித்தம் காரணமாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆதலால் காவலர்கள் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே காவலர்களின் மனநலன் மற்றும் குடும்பநலன் கருதி “ஆனந்தம்” எனும் திட்டத்தை  மதுரை  மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அவர்கள் காவலர்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், குடும்ப ஆரோக்கியம் மற்றும் எப்போதும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆனி விஜயா , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் , அண்ணாநகர்  காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் மார்டின்.கண்ணன் , அமெரிக்கன் கல்லூரி முதல்வர் .தவமணி கிறிஸ்டோபர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் மனோகர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் .நிஷாந்த் மற்றும் பாத்திமா கல்லூரி முதல்வர் . செலீன் சகாய மேரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த “ஆனந்தம்” திட்டத்தை மதுரை மாநகர காவல்துறை, எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் பெருமாடிக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மதுரை கல்லூரி, E.M.G.யாதவா கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கீழ்க்கண்ட பணிகளை காவலர் குடும்பத்திற்காக தொடர்ந்து மேற்கொள்ள உள்ளனர்.. 1. காவலர்கள் தங்களது சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல்.

.2. பெண்கள், இளம் பருவத்தினர், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல் மற்றும் குழுக்கள் மூலம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை நடத்துதல்..

3. காவலர்கள் குடும்பத்தில் தேவைப்படும் நபர்களை படிப்பிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிய வழிகாட்டுதல்.. 4. சிறிய மற்றும் பெரிய சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிக்கடி சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல்.. 5. காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக காவலர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவையான வளர்ச்சித் திட்டங்களை வகுத்தல்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!