17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் ரூ 1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார். பதிவாளர் கைது

காட்பாடியில் ரூ 1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார். பதிவாளர் கைது

எழுதியவர்: mohan October 12, 2019, 10:29 am

வேலூர் மாவட்டம காட்பாடி அடுத்த கழிஞ்சூரை சேர்ந்த சசிகுமார். இவர் பெங்களூருவில் சரக்கு போக்குவரத்து தொழில் செய்து வருகிறார். கழிஞ்சூரில் தனது பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு, காலி வீட்டு மனைகளை தனது மகன்கள் சசிகுமார், விஜயகுமாருக்கு தானசெட்டில்மெண்ட் எழுதி கொடுக்க தனது ஊரில் இருக்கும் பத்திர எழுத்தர் சந்திரமோகனை அணுகினார். இதற்கு கட்டண தொகை ரூ 35 ஆயிரம் தான். ஆனால் சார் பதிவாளர் தேவராஜன் (53) ( செய்யூர் – காஞ்சி மாவட்டம் ) ரூ 1 லட்சம், லஞ்சமாக கேட்டு உள்ளார். இது குறித்து சசிகுமார் வேலூரிலுள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் தந்தார். அதன் படி டிஸ்பி தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி கொண்ட டீம் இன்று 11. ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிரடியாக காட்பாடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து ரூ 1 லட்சம் வாங்கிய சார்-பதிவாளர் தேவராஜ், உதவிய பத்திர எழுத்தர் சந்திரமோகன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். அங்கிருந்த புரோக்கர்களும் பத்திர எழுத்தர்களும் ஓட்டம் பிடித்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!