18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பைபாஸ் சாலையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து

மதுரை பைபாஸ் சாலையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து

எழுதியவர்: mohan October 11, 2019, 7:50 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை துரைசாமி நகர் மெயின் ரோட்டில் முன்னாள் அரசு மருத்துவமனை மருத்துவரான ராஜ ராஜேஸ்வரன்  வீட்டில் சுமார் 7 மணி அளவில் கரும்புகை வந்துள்ளது ..கட்டிட வேலை பார்த்து வேலை பார்த்துக்கொண்டிருந்தவா்கள் கரும்புகையை பார்த்ததும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர் தீயை  அணைத்தனா்.   எனினும் வீட்டில் இருந்த மெத்தை கட்டில் மற்றும் மர சாமான்கள் சில தீயில் கருகின. மேலும் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்று இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது .இதுகுறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!