17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அக்.13ல் ரயில் போக்குவரத்து மாற்றம்

அக்.13ல் ரயில் போக்குவரத்து மாற்றம்

எழுதியவர்: mohan October 11, 2019, 7:35 pm

மதுரை ரயில் நிலைய ரயில் பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அக்13 அன்று காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண்.56319 நாகர்கோவில் – கோவை பயணிகள் ரயில், மறு மார்க்கத்தில் இருந்து காலை 7:20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோவை – நாகர்கோவில் பயணிகள் ரயில், கோவில்பட்டி – திண்டுக்கல் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து முற்பகல் 11:50 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் மற்றும் மதுரையிலிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56735 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் ஆகியவை அக்.13 அன்று மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  பாலக்காட்டில் இருந்து அதிகாலை 4:10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் மற்றும் திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் ஆகியவை அக்.13 அன்று திண்டுக்கல் – திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!