17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி

எழுதியவர்: mohan October 11, 2019, 7:23 pm

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகேயுள்ள பெத்துலுப்பட்டியில் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ரவீந்தரா பயர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்ட வந்த நிலையில் பட்டாசு ஆலையிலுள்ள ஒரு அறையில் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் தரைச் சக்கரத்திற்க்கு முனை மருந்து செலுத்தும் போது தரையில் உராயு ஏற்பட்டு தீடிரென வெடி விபத்து ஏற்பட்டன. இதில் சம்பவ இடத்தில் முத்து பாண்டி உடல் சிதறி பலியானார் மேலும் அந்த தொழிலாளி பணி புரிந்த கட்டிடம் தரைமட்டமாகின. சம்பவ இடத்திற்க்கு சிவகாசி தாசில்தார் ரெங்கநாதன், பட்டாசு மற்றும் தீப்பொட்டி தனி தாசில்தார், மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் போர் மேனன தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!