17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முத்துபேட்டை கவுசானல் கல்லூரியில் ரத்த தான முகாம்

முத்துபேட்டை கவுசானல் கல்லூரியில் ரத்த தான முகாம்

எழுதியவர்: mohan October 11, 2019, 5:39 pm

இராமநாதபுரம் மாவட்டம் முத்து பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி (இராமநாதபுரம்), கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி கலை அரங்கில் இன்று(11/10/19) நடந்தது. முதல்வர் முனைவர் கே.ஹேமலதா முன்னிலையில், கல்லூரி செயலாளர் எஸ்.மரியசூசை அடைக்கலம் தொடங்கி வைத்தார். கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் எம்.முரளி வரவேற்றார். ரத்த தான அவசியம் குறித்தும், ரத்த கொடையாளர்களை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் பாராட்டி பேசினார்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் பத்தூல் ராணி பாத்திமா தலைமையில் மருத்துவக்குழுவினர் 50 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். குருதி கொடையாளர்களுக்கு இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் எஸ்.ஹாரூண், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டி. முனியசங்கர், ரெட் கிராஸ் கீழக்கரை தாலுகா செயலாளர் டாக்டர் எஸ்.சுந்தரம் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். ரெட் கிராஸ் ரத்த தான பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் எஸ்.அய்யப்பன், கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் எம்.முரளி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!