18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி- ஸ்வீட்ஸ் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு.தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250கிலோ பறிமுதல்.

உசிலம்பட்டி- ஸ்வீட்ஸ் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு.தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250கிலோ பறிமுதல்.

எழுதியவர்: mohan October 11, 2019, 3:54 pm

உசிலம்பட்டியில் உள்ள ஸ்வீட்ஸ் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250கிலோ பறிமுதல் செய்து 30ஆயிரம் அபராதம் விதித்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரிகளில் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உபயோகிப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் அகமது கபீர் ஆகியோர்கள் தலைமையில் பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் பேக்கரிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.அப்போது பேக்கரிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிப்பைகள், டீ கப்புகள், உள்ளிட்ட பொருட்கள் 250 கிலோவை பறிமுதல் செய்தனர். அதனைதொடர்ந்து இரண்டு பேக்கரிகளுக்கு 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இது போன்று தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!